ஐபில் மூன்றாவது முறையாக சென்னை வென்றது ...... IPL முடிவுக்கு வந்தது
IPL முடிவுக்கு வந்தது ; CSK WON THE 3RD TIME
11 வது சீசன்
11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மூன்று முறை வென்ற சென்னை அணியும் ஒரு முறை வென்ற ஹைதராபாத் அணியும் இன்னொரு முறை வெல்ல கடும் போட்டி போட்டன .
அதில் சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை சாதனையை சமன் செய்ததது .
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷேன் வாட்சன் வென்றார்.
விருது வென்றவர்கள் ;
எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது -டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த்
அதிக விக்கெட் வீழ்த்தியர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் - மொத்தம் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.
அதிக ரன் அடித்தவர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் - 7 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.
சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் விருது வழங்கப்பட்டது.
இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கு வழங்கப்பட்டது.
இந்த தொடரின் பேர் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.
சென்னை 2010 மற்றும் 2011 என வென்று இருந்தாலும் இந்த வெற்றியை மறக்க முடியாது என்பதுதான் உண்மை .
இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்தாலும் எங்களால் முடியும் என்று சாதித்து காட்டிய சென்னை அணிக்கு ஒரு விசில் போடுங்கள் .
என்னதான் சென்னை வென்றாலும் டோனி பேட்டிங் ஆடாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் . அடுத்த ஐபில் போட்டியில் சந்திக்கலாம் .........................





nanga thirumbi vanthutom
ReplyDelete